அமெரிக்காவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது கலிபோர்னியா அருகே ஹாப்மூன் பே பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல் ஐயாவா பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர்

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை