உலகக்கோப்பை கால்பந்து: உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியை 51வது இடத்தில் இருக்கும் சவூதி அணி வீழ்த்தி அபாரம்..!

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கால்பந்து: உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியை 51வது இடத்தில் இருக்கும் சவூதி அணி வீழ்த்தி அபாரம்..!

லுசைல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவூதி அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, சவூதி அரேபியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சவூதி அரேபியா அணி, அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். பின்னர் சூடு பிடித்த ஆட்டத்தில் சவூதி அணி 48 வது நிமிடத்தில் ஒரு கோலும், 53வது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்து முன்னிலை பெற்றது. அர்ஜென்டினா அணி கடைசி வரை எவ்வளவோ முயன்றும் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சவூதி அணி. உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியை, 51வது இடத்தில் இருக்கும் சவூதி அணி வீழ்த்தியது. நட்சத்திர வீரர்கள் இருக்கும் அர்ஜெண்டினா அணியை சவுதிஅரேபியா வீழ்த்தியது அர்ஜெண்டினா அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை