தமிழக விமான நிலையங்களில் கையாண்ட சரக்குகள் உயர்வு

தினமலர்  தினமலர்
தமிழக விமான நிலையங்களில் கையாண்ட சரக்குகள் உயர்வு

சென்னை:கடந்த ஆறு மாதங்களில் 1.84 லட்சம் டன் சரக்குகள், தமிழகம் முழுதும் உள்ள விமான நிலையங்களில் கையாளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச பயணியர் விமான சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இருப்பினும், சரக்கு விமான சேவைகள் தடையின்றி செயல்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருட்களுடன், மருத்துவ பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால், 2020ம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரித்துள்ளது.இதில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 1.78 லட்சம் டன் சரக்குகள் நடப்பு ஆண்டில் கையாளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டில் 1.13 லட்சம் டன்னாக இருந்தது. மொத்தத்தில் 2020ம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 64 ஆயிரத்து 760 டன் சரக்குகள், தமிழகம் முழுதும் உள்ள விமான நிலையங்களில் அதிகம் கையாளப்பட்டுள்ளன என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை