பாண்டிச்சேரியை பரிதாபசேரியாக்கும் பாஜக..; ஆபிஸ் உடைப்பு.. அமைச்சர் பதவி கேட்டு ஜான்குமார் ஆதரவாளர்கள் மறியல்

FILMI STREET  FILMI STREET
பாண்டிச்சேரியை பரிதாபசேரியாக்கும் பாஜக..; ஆபிஸ் உடைப்பு.. அமைச்சர் பதவி கேட்டு ஜான்குமார் ஆதரவாளர்கள் மறியல்

புதுச்சேரி மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி கவிழ்த்தவர் ஜான்குமார் எம்எல்ஏ.

அதன் பின்னர் ஏற்கெனவே பேரம் பேசி வைத்தபடி பாஜகவில் இணைந்தார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுப்படி புதுச்சேரியில் முதல்வராக பொறுப்பேற்றார் ரங்கசாமி.

சட்டமன்றத் தேர்தலில் காமராஜ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜான்குமார்.

இவரது மகன் ரிச்சர்ட் நெல்லித்தோப்பு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

எனவே ஒரே குடும்பத்தில் 2 சட்டமன்றத் உறுப்பினர்கள் தேர்வானதால் நிச்சயம் ஒரு அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்ற ஆசையில் தந்தையும் மகனும் இருந்தனர்.

ஆனால் என்ஆர்காங் – பாஜக தரப்பில் இதற்கான உடன்பாடு எட்டப்படவில்லை.

பாஜகவுக்கு 2 அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் பதவிதான் என்பதில் என்ஆர் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. அதனடிப்படையில் சபாநாயகர் பதவியை பாஜக எம்எல்ஏ செல்வம் பெற்றார்.

இந்த நிலையில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. அமைச்சர் பதவி வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததால் அவரது ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

இதனால் புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

பாஜக அலுவலக பேனரை கிழித்தனர். அலுவலகத்தை சூரையாடினர் ஜான்குமார் ஆதரவாளர்கள். மேலும் சாலை மறியலும் செய்தனர்.

இதனிடையில் அமைச்சர் பதவி கேட்டு சிபாரிசு செய்ய சொல்லி டெல்லி சென்றுள்ளார் ஜான்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரியின் தற்போதைய நிலையை பார்த்தால் பரிதாபசேரியாகத்தான் தெரிகிறது.

Pondy BJP MLA John Kumar’s supporters stage protests

மூலக்கதை