கூடுதல் ஊக்கச் சலுகை சி.ஐ.ஐ., அரசிடம் கோரிக்கை

தினமலர்  தினமலர்
கூடுதல் ஊக்கச் சலுகை சி.ஐ.ஐ., அரசிடம் கோரிக்கை

புதுடில்லி:நாட்டின் பொருளாதார மீட்சிக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என, இந்திய தொழிலகங்களின் கூட்ட மைப்பான சி.ஐ.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்புகளை அடுத்து, விரைவான பொருளாதார மீட்சிக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.மேலும் இதில்,‘ஜன் தன்’ கணக்குகளில் பணம் வழங்குவது உள்ளிட்டவையும் அடக்கம் என தெரிவித்துள்ளது.

இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் டி.வி. நரேந்திரன் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.ஆண்டின் பிற்பாதியில் தேவைகள் அதிகரிப்பு, அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடுவது உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்திய பொருளாதாரம், நுகர்வின் அடிப்படையிலான பொருளா தாரமாகும்.

எனவே, தேவைகளை அதிகரிக்கும் வகையில், அரசு, மேலும் ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை