கேனனின் 4 புதிய வகை பிரிண்டர்கள் அறிமுகம்

தினமலர்  தினமலர்
கேனனின் 4 புதிய வகை பிரிண்டர்கள் அறிமுகம்

கேனன் இந்தியா நிறுவனம் தனது போட்டோ பிரிண்டர்களின் வரிசையை விரிவுபடுத்தும் வகையில் பிக்ஸ்மா ஜி570, பிக்ஸ்மா ஜி670, இமேஜ் ப்ரோகிராப் ப்ரோ-300 மற்றும் பிக்ஸ்மா ப்ரோ 200 ஆகிய 4 புதிய பிரிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு புதிய பிக்ஸ்மா ஜிவரிசை 6 வண்ண இங்க் டேங்க் பிரிண்டர்கள் நிழற்பட ஸ்டூடியோக்கள், வணிகங்கள், இல்லங்கள் மற்றும் படைப்புத் திறன் பணிகளுக்கு உயர்தரம், மேம்பட்ட நிழற்பட ஆயுள், குறைந்த செலவு பிரிண்டிங்க் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜி வரிசை போட்டோ பிரிண்டர்கள் இங்க் டேங்க் பிரிண்டர் உலகில் இதுவரை காணாத ஒளிர்தன்மையை வழங்கும். தொழில்முறை நிழற்பட நிபுணர்கள், நிழற்படப் பள்ளிகள், தொழில்முறை சாராதவர்கள் ஆகியோரும் பல்வகைக் காகித ஊடகங்களில் அசத்தலான உருவங்களை அச்சடிக்க கேனன் நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பங்களான இமேஜ் ப்ரோகிராப் ப்ரோ 300 மற்றும் பிக்ஸ்மா ப்ரோ 200 ஆகியவை, ஏ3+ அளவில் தொழில்முறை நிழற்படங்களையும், பொருட்காட்சிகளுக்கான உடனடி பிரிண்ட்களையும் உருவாக்கும். கேனன் ஜி670 ரூ.24,801க்கும், ஜி570 ரூ18,789க்கும் பிக்ஸ்மா ப்ரோ 200 ரூ41,401 க்கும், இமேஜ் ப்ரோகிராப் ப்ரோ 300 ரூ.59,621க்கும் கிடைக்கும்.

ஏனைய ஜி வரிசை பிரிண்டர்களைப் போலவே புதிய மாடல்களும் குறைந்த செலவு என்பதுடன் உயர் தரமாகவும் இருக்கும். பிரிண்டரில் இருக்கும் இங்க் மட்டுமே 4க்கு 6 இஞ்ச் அளவிலான 3800 தாள்களில் அசத்தலாக அச்சடிக்கும். புதிய ஜி வரிசை 6 வண்ண ஆல் டை இங்க் டேங்க் அமைப்பு கொண்டவை. சியான், மஜந்தா, யெல்லோ மற்றும் பிளாக்குடன் கூடிய இந்தப் பிரிண்டர்களில் புதிதாக ரெட் மற்றும் க்ரே இங்க் உள்ளன.
நிழற்படங்களை ப்ளட்-ரெட்சன்செட் தொடங்கி ஆட்டோமொபைல் வரை க்ளீமிங்க் ரெட் ஆக, காம்போசிட் இங்கால் முடியாதவற்றை ஆர்டீரியல் இண்டென்சிடியுடன் சூப்பர் சார்ஜ் செய்து ரெட் இங்க் மாற்றும். க்ரே இங்க் ஒவ்வொரு பிரிண்ட்டிலும் தொடர் மோனோ க்ரோமேடிக் துல்லியத்தை உறுதிப்படுத்த பிளாக் இங்க் காண்ட்ராஸ்ட் சேர்த்து பேக் க்ரவுண்ட் செபரேஷனிலிருந்து முன்பக்கத்தை மேம்படுத்தும். ஜி570 பிரிண்டிங்க் மட்டுமே வழங்கும் நிலையில் ஜி670 பிரிண்டிங்குடன், ஸ்கேன் மற்றும் காப்பி ஆகிய வசதிகளையும் வழங்கும். சுற்றுச்சூழல் உணர்வுடன், வித்தியாசமான மின் சேமிப்பு அம்சம், பிரிண்டர் கணிசமான நேரத்தைத் தாண்டி இயங்காத போது அதன் இயக்கத்தை தானியாகவே நிறுத்தி விடும். அதே சமயம் ஸ்மார்ட்ஃபோன் அல்லது மடிக்கணினியிலிருந்து ஏதேனும் பிரிண்ட் ஆணை வந்தால் தூக்கத்திலிருந்து எழுவதுபோல் பிரிண்டர் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.

கேனன் இமேஜ் ப்ரோகிராப் ப்ரோ 300 இல் பொருத்தப்பட்டுள்ள லுசியா ப்ரோ பிக்மெண்ட் இங்க் சிஸ்டம் மற்றும் கிரிஸ்டல் ஃபிடிலிடி டிஜிடல் இமேஜ் செய்முறைப் பணியோட்டம் அகியவை இமேஜ் படம் பிடித்தல் தொடங்கி பிரிண்ட் வரை உயர் தர இமேஜ் தரத்தை உறுதிப்படுத்துவதால், அனைத்துத் தொழில்முறை நிழற்பட நிபுணர்களுக்கும் ஏற்றதாகும். பிரிண்டரிலுள்ள கேனனின் லுசியா ப்ரோ புராசஸர் பெரியஇமேஜ் தரவுகளை எளிதாகக் கையாள்வதுடன், தேவைப்படும் அதிகபட்ச இங்க் துளியைத் துல்லியமாகவும்,வேகமாகவும் கணித்து, உயரிய தரத்தில் வேகமாக அச்சிடுகிறது. கேனன் பிக்ஸ்மா ப்ரோ-200 இல் உள்ள வித்தியாசமான 8 கலர் டை இங்க் அமைப்பு விரிவான கலர் ரகம், சூப்பர் காண்ட்ராஸ்ட், மேம்பட்ட பிளாக், ரெட் மற்றும் ப்ளூ ஜோன்களில்கலர் எக்ஸ்பிரஷனுடன் கூடிய உயர் தரமான பிரிண்டிங்கை வழங்கும்.

புதிய பிரிண்டர்கள் அறிமுகம் குறித்து கேனன் இந்தியா தலைவர் அண்ட் சிஇஓ மனபு யமாசாகி கூறுகையில், 3600 உள்ளீடு முதல் வெளியீடு வரை முழுமையான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக விளங்கும் நாங்கள் வண்ணமயமான, நினைவுகளை அழகான படங்களாக எங்கள் இமேஜிங்க் தொழில்நுட்பம் மூலாம் மாற்றுவது குறித்துப் பெருமைப்படுகிறோம்.புதுமையான, விலை குறைந்த மற்றும் அச்சுத் தேவைகளுக்கு ஏற்ற பொருள் தீர்வுகளை வழங்கும் எங்களது நான்கு புதிய பிரிண்டர்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும், என்றார்.

மூலக்கதை