கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நயன்தாரா  விக்னேஷ் சிவன்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் என கூறப்படும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அவர்கள் தங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மூலக்கதை