எரிசாம்பல் பயன்பாட்டுக்கு புதிய வரைவு விதிகள்

தினமலர்  தினமலர்
எரிசாம்பல் பயன்பாட்டுக்கு புதிய வரைவு விதிகள்

சென்னை:அனல் மின் நிலைய கழிவாக கிடைக்கும் எரிசாம்பலை, 100 சதவீதம் பயன்படுத்துவதை உறுதி செய்ய, மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

நிலக்கரியை அடிப்படை ஆதாரமாக வைத்து, அனல் மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் இருந்து எரிசாம்பல் கழிவாக கிடைக்கிறது.எரிசாம்பலை எப்படி மறு பயன்பாட்டுக்கு உட்படுத்துவது என்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான அனல் மின் நிலையங்களில், 100 சதவீத மறுபயன்பாடு இன்னும் உறுதியாகவில்லை.

இதை கருத்தில் கொண்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், புதிய வரைவு விதிகளை உருவாக்கியது. இதன்படி செங்கல், சிமென்ட் உற்பத்தி, அணைகள், மேம்பாலங்கள் கட்டு மானம் உள்ளிட்ட, 11 வழிகளில் எரிசாம்பலை பயன்படுத்த வேண்டும். இதில் அனல் மின் நிலையங்கள், கட்டுமான நிறுவனங்களின் பொறுப்பு வரையறுக்கபட்டு உள்ளன.

வரைவு விதிகள் குறித்து, 60 நாட்களுக்குள் பொது மக்கள், சம்பந்தப்பட்ட துறையினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை