ஊழியர்களுக்காக மருந்துகள் இறக்குமதி

தினமலர்  தினமலர்
ஊழியர்களுக்காக மருந்துகள் இறக்குமதி

புதுடில்லி:கொரோனா தொடர்பான மருந்துகளை, தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கும் வகையில், அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்குமாறு, நிறுவனங்கள், அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

கொரோனா பாதிப்பை தடுக்கும் மருந்துகளான,‘ரெம்டெசிவிர், பாவிபிராவிர், டோசிலிசுமாப்’ போன்றவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இம் மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு, கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு விற்க படுகின்றன. இந்நிலையில், பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்காக இம்மருந்துகளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

மேலும், இம்மருந்துகளை ஊழியர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, ‘ரெம்டெசிவிர்’ போன்ற மருந்து களை, 500, ‘டோஸ்’ வரை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிறுவனங்கள் கேட்டுள்ளன. மேலும், இம்மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைகளின்படி, தேவைப்படும் ஊழியர்களுக்கும்; அவரின் குடும்பத்தினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.

மூலக்கதை