வங்கதேசத்திற்கு எதிராக 2வது டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

தினகரன்  தினகரன்
வங்கதேசத்திற்கு எதிராக 2வது டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

கண்டி: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இலங்கை 209ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதுடன் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 டெஸ்டகளை கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்நிலையில் 2வது டெஸ்ட் கண்டியில் ஏப்.29ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களம் கண்ட இலங்கை முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 251ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து 2வது இன்னிங்சிலும் இலங்கை 9 விக்கெட் இழப்புக்கு 194ரன் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ஆனால் 437ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 4வது நாளான நேற்று முன்தினம் 5 விக்கெட் இழப்புக்கு 177ரன் எடுத்திருந்தது. கடைசிநாளான நேற்று 5 விக்கெட்கள் கைவசம் இருக்க 260ரன் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மேலும் 50ரன்களை சேர்த்த வங்கதேசம் 227ரன்னில் ஆட்டமிழந்தது. அதனால் இலங்கை 209ரன்னில் வெற்றிப் பெற்றது. கூடவே தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட்டில் அறிமுகமான ஜெயவிக்ரமா  2இன்னிங்சிலும் 11விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார். முதல் டெஸ்ட்டில் 244, 2வது டெஸ்ட்டில் 118, 66ரன் குவித்த கேப்டன் கருணரத்னே தொடர் நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை