எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம்

தினமலர்  தினமலர்
எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ்-சசிகுமார் நடிப்பில் தயாராகி உள்ள படம் எம்ஜிஆர் மகன். மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி பொன்ராம் கூறியதாவது: ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக் கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக சத்யராஜிடம் வரும் மிருணாளினி ரவி அப்பா மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை . என்கிறார் பொன்ராம்.

மூலக்கதை