ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது; ரஜினி பொங்கல் வாழ்த்து

தினமலர்  தினமலர்
ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது; ரஜினி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளான இன்று நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ‛அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டுருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்,' எனக் கூறியுள்ளார்.

மூலக்கதை