அக்தருக்கு ‘ஆப்பரேஷன்’ | நவம்பர் 22, 2021

தினமலர்  தினமலர்
அக்தருக்கு ‘ஆப்பரேஷன்’ | நவம்பர் 22, 2021

கராச்சி: மூட்டு மாற்று ஆப்பரேஷனுக்காக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளார் சோயப் அக்தர். 

பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 46. உலகின் அதிவேக பவுலராக இருந்த இவரை ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என அழைத்தனர். மணிக்கு 161.3 கி.மீ., வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். 

46 டெஸ்ட், 163 ஒருநாள், 15 ‘டி–20’ போட்டிகளில் பங்கேற்று 178, 247, 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2011ல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 

அவ்வப்போது முழங்கால் காயங்களால் அவதிப்பட்ட அக்தர், கடந்த இரு ஆண்டுக்கு முன், முழங்கால் சீரமைப்பு ஆப்பரேஷன் செய்து கொண்டார். இருப்பினும் முழங்கால் பிரச்னை முழுமையாக தீரவில்லை. விரைவில் மூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்ய உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘இனிமேல் என்னால் பந்துவீசவே முடியாது. அந்த நாட்கள் முடிந்து விட்டன. விரைவில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சென்று முழுமையாக மூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்ய உள்ளேன்,’’ என்றார். 

மூலக்கதை