தங்க பத்திர வெளியீடு கிராம் 4,765 ரூபாய்

தினமலர்  தினமலர்
தங்க பத்திர வெளியீடு கிராம் 4,765 ரூபாய்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் ஏழாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்குகிறது. இதையடுத்து தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 4,765 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பத்திர வெளியீடு நாளை துவங்கி, 29ம் தேதியுடன் முடிவடைகிறது. வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,715 ரூபாய்க்கு கிடைக்கும்.

வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

மூலக்கதை