பென்ஷன் திட்டத்தின் புதிய இலக்கு

தினமலர்  தினமலர்
பென்ஷன் திட்டத்தின் புதிய இலக்கு

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.


அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் ஓய்வூதிய திட்டமாக அடல் பென்ஷன் திட்டம் அமைகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக, ஓய்வு காலத்தில், 5,000 ரூபாய் வரை மாத பென்ஷன் பெறலாம்.இந்த நிதியாண்டில் அடல் பென்ஷன் திட்டத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக பென்ஷன் ஆணைய முழுநேர உறுப்பினர் தீபக் மொஹந்தி தெரிவித்துள்ளார்.


இதுவரை இந்த நிதியாண்டில் 39.8 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். இது, கடந்த ஆண்டு 79 லட்சமாக இருந்தது.அடல் பென்ஷன் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்வதில் உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கின்றன. வங்கிகள், வங்கிசாரா அமைப்புகள், பேமென்ட் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அடல் பென்ஷன் திட்டத்தை பயனாளிகளிடம் விரிவாக கொண்டு செல்ல ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுதும் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை