நாட்டின் சிமென்ட் உற்பத்தி 12 சதவீதம் அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
நாட்டின் சிமென்ட் உற்பத்தி 12 சதவீதம் அதிகரிக்கும்

புதுடில்லி:நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என, தர நிர்ணய அமைப்பான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் சிமென்ட் உற்பத்தி, கடந்த 5 மாதங்களில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் உற்பத்தி 12 சதவீதம் வரை உயர்ந்து, 332 மில்லியன் டன் ஆக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிமென்ட் உற்பத்தி உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், தேவை அதிகரித்து வருவதாகும். விலையை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வருவாயை பொறுத்தவரை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 12 நிறுவனங்களின் வருவாய், நடப்பு நிதியாண்டில் 13 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை