ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம் | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம் | அக்டோபர் 13, 2021

புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல்., தொடரில் சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு முதல், அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் வரும் அக். 25ல் துபாயில் நடக்கவுள்ளது. புதிய அணிக்கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 7000 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆமதாபாத், லக்னோ/புனே நகரங்கள் பெயரில் புதிய அணிகள் வர அதிக வாய்ப்புள்ளன.

 

புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பம், கடந்த ஆக. 31 முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தை அக். 10 வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன. இதனை பரிசீலனை செய்த பி.சி.சி.ஐ., வரும் அக். 20 வரை விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள கால அவகாசம் வழங்கியுள்ளது.

 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், ‘‘புதிய அணிகளுக்கான விண்ணப்பம் பெறுவதற்கு கால அவகாசம் வழங்கும்படி பல்வேறு தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால், வரும் அக். 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,’’ என, தெரிவித்திருந்தது.

மூலக்கதை