500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம்

தினமலர்  தினமலர்
500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம்

புதுடில்லி:‘பிரஷ்வொர்க்ஸ்’ எனும் மென்பொருள் வணிக நிறுவனம், அனைவரது புருவத்தையும் உயர வைத்துள்ளது.இதன் 4,300 ஊழியர்களில் 12 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட 500 ஊழியர்கள், இன்று கோடீஸ்வரர்களாக ஆகியிருக்கின்றனர். இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 30 வயதுக்குள்ளானவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, அமெரிக்காவின், ‘நாஸ்டாக்’ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் 13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 96 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஆகும்.ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை, பங்குகளாக வழங்கும் பழக்கத்தை பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

அந்த வகையில், இந்நிறுவன ஊழியர்களுக்கும் பங்குகள் வழங்கப்பட்டன. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியதை அடுத்து, ஊழியர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர்.

மூலக்கதை