‘ஜியோ, ஏர்டெல்’ நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
‘ஜியோ, ஏர்டெல்’ நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், ‘ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்’ ஆகிய நிறுவனங்கள் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர். ‘வோடபோன் ஐடியா’ இழப்பைச் சந்தித்து உள்ளது.

இது குறித்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ தெரிவித்து உள்ளதாவது: ஜூலையில் ரிலையன்ஸ் ஜியோ 65.1 லட்சம் வாடிக்கையாளர்களையும்; பார்தி ஏர்டெல் 19.42 லட்சம் பேரையும் சேர்த்துள்ளன.அதே சமயம், வோடபோன் ஐடியா 14.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

இதையடுத்து, ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முறையே 44.32 கோடியாகவும், 35.40 கோடியாகவும் உயர்ந்துள்ளன. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 27.19 கோடியாக சரிவைக் கண்டுள்ளது.இவ்வாறு டிராய் தெரிவித்து உள்ளது.

மூலக்கதை