அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு

ஹிந்தித் திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது ஹிந்தி நடிகையான பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை டுவிட்டரில் வைத்துள்ளார். இது புயலை கிளப்பி உள்ளது.

“அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார். பிரதமர் நரேந்திர மோடிஜி, இந்த கிரியேட்டிவ் நபர் எப்பேர்ப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர் என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளட்டும். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கும், என் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள்,” என பிரதமரையும், 'டேக்' செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டு தற்போது பாலிவுட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஹிந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை, மராத்திய அரசுக்கு எதிராக அதிரடி கருத்துக்களைக் கூறும் கங்கனா விவகாரம் என பரபரப்பில் உள்ளது பாலிவுட். இப்போது இந்த விவகாரத்தாலும் மேலும் பரபரப்பாகி உள்ளது.

மூலக்கதை