மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2: ஆண்ட்ரியா நடிக்கிறார்

தினமலர்  தினமலர்
மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2: ஆண்ட்ரியா நடிக்கிறார்

2014ம் ஆண்டு வெளிவந்த படம் பிசாசு. மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாகா, பிரயாக்ஹா மார்ட்டின், ராதாரவி உள்பட பலர் நடித்திருந்தார்கள். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது 6 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் பிசாசு 2 என்ற பெயரில் உருவாகிறது. இதனை மிஷ்கின் இயக்குகிறார். முருகானந்தம் தயாரிக்கிறார்.

ஆண்ட்ரியா ஹீரோயின். சைகோ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி இதிலும் வில்லனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க பேய் கதையாக தயாராகிறது. ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறுகிறது.

மூலக்கதை