நோ என்ட்ரி மூலம் ரீ என்ட்ரி ஆகும் ரன்யா ராவ்

தினமலர்  தினமலர்
நோ என்ட்ரி மூலம் ரீ என்ட்ரி ஆகும் ரன்யா ராவ்

கர்நாடகவை சேர்ந்தவர் ரன்யா ராவ். மாணக்யா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார் அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம்பிரபு நடித்த வாகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழிலோ, கன்னடத்திலோ அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு கன்னட படத்தில் மட்டும் நடித்தார்.

தற்போது புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள நோ என்ட்ரி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். இதில் பிந்து மாதவியும், ரன்யா ராவும் ஹீரோயின்கள். கோல்கட்டாவில் வசிக்கும் சகோதரிகள் இருவரும் ஊட்டில் உள்ள தங்கள் பங்களாவை விற்க வரும்போது ஏற்படும் அனுபவங்களை திகிலாக சொல்லும் படம்.

மூலக்கதை