தொடர் நாயகன் | செப்டம்பர் 18, 2020

தினமலர்  தினமலர்
தொடர் நாயகன் | செப்டம்பர் 18, 2020

ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் வாட்சன் (2008, 2013), சுனில் நரைன் (2012, 2018), ஆன்ட்ரி ரசல் (2015, 2019) முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 2 முறை இவ்விருதை வென்றனர். கில்கிறிஸ்ட் (2009), சச்சின் (2010), கெய்ல் (2011), மேக்ஸ்வெல் (2014), விராத் கோஹ்லி (2016), பென் ஸ்டோக்ஸ் (2017), ஆகியோர் தலா ஒரு முறை இவ்விருதை கைப்பற்றினர்.

 

ஆட்ட நாயகன்

அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்களுக்கான பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 21 முறை இவ்விருது வென்றுள்ளார். இவரை அடுத்து டிவிலியர்ஸ் (20), தோனி (17), டேவிட் வார்னர் (17), ரோகித் சர்மா (17), யூசுப் பதான் (16), ஷேன் வாட்சன் (15), ரெய்னா (14), காம்பிர் (13) ஆகியோர் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றனர்.

 

யூசுப் பதான் (ராஜஸ்தான், 2008), கும்ளே (பெங்களூரு, 2009), ரெய்னா (சென்னை, 2010), முரளி விஜய் (சென்னை, 2011), மன்விந்தர் பிஸ்லா (கோல்கட்டா, 2012), போலார்டு (மும்பை, 2013), மணிஷ் பாண்டே (கோல்கட்டா, 2014), ரோகித் சர்மா (மும்பை, 2015), பென் கட்டிங் (ஹைதராபாத், 2016), குர்னால் பாண்ட்யா (மும்பை, 2017), ஷேன் வாட்சன் (சென்னை, 2018), பும்ரா (மும்பை, 2019) ஆகியோர் ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்றனர்.

 

ஐ.பி.எல்., அரங்கில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில், பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி முன்னிலை வகிக்கிறார். இவர், கடந்த 2016ல் நடந்த தொடரில் 16 போட்டியில் 4 சதம், 7 அரைசதம் என 973 ரன்கள் குவித்தார். இதேபோல ஹைதராபாத்தின் வில்லியம்சன் (735 ரன், 2018), பெங்களூருவின் கெய்ல் (733 ரன், 2012 மற்றும் 608 ரன், 2011), சென்னையின் மைக்கேல் ஹசி (733 ரன், 2013), ஹைதராபாத்தின் வார்னர் (692 ரன், 2019 மற்றும் 641 ரன், 2017 மற்றும் 562 ரன், 2015 ), கோல்கட்டாவின் உத்தப்பா (660 ரன், 2014), மும்பையின் சச்சின் (618 ரன், 2010), பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் (616 ரன், 2008), சென்னையின் ஹைடன் (572 ரன், 2009) ஆகியோர் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தனர். இவர்களுக்கு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான விருதுடன், ‘ஆரஞ்சு’ நிற தொப்பி வழங்கப்பட்டது.

 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) வரலாற்றில், ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், டுவைன் பிராவோ முன்னிலை வகிக்கிறார். கடந்த 2013ல் நடந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர், 18 போட்டியில் 32 விக்கெட் கைப்பற்றினார். இதேபோல மும்பையின் மலிங்கா (28 விக்கெட், 2011), ஹைதராபாத்தின் புவனேஷ்வர் குமார் (26 விக்கெட், 2017 மற்றும் 23 விக்கெட், 2016), சென்னையின் டுவைன் பிராவோ (26 விக்கெட், 2015), இம்ரான் தாகிர் (26 விக்கெட், 2019), டில்லியின் மார்கல் (25 விக்கெட், 2012), பஞ்சாப் அணியின் ஆன்ட்ரூ டை (24 விக்கெட், 2018), டெக்கான் அணியின் ஆர்.பி. சிங் (23 விக்கெட், 2009), சென்னையின் மோகித் சர்மா (23 விக்கெட், 2014), ராஜஸ்தானின் தன்வீர் (22 விக்கெட், 2008), டெக்கான் அணியின் பிரக்யான் ஓஜா (21 விக்கெட், 2010) ஆகியோர் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தினர். இவர்களுக்கு சிறந்த பவுலர்களுக்கான விருதுடன், ‘பர்பிள்’ நிற தொப்பி வழங்கப்பட்டது.

மூலக்கதை