சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்று குறைந்தது

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்று குறைந்தது

புதுடில்லி, செப். 15–

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 6.69 சதவீதமாக இருப்பதாக, மத்திய புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, சில்லரை விலை பணவீக்கம் ஓரளவு குறைந்து உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், 6.73 சதவீதமாக இது இருந்தது. முன்னர் இது, 6.93 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது, தற்போது மாற்றப்பட்டு, 6.73 சதவீதம் என குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலையில், உணவு பணவீக்கம், 9.62 சதவீதமாக இருந்தது.இந்நிலையில், உணவு பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில், 9.05 சதவீதமாக சற்று குறைந்துஉள்ளது.நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் ஒன்றாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் இலக்கான, 2 – 6 சதவீதத்தை தாண்டி, 6.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் மொத்தவிலை பணவீக்க விகிதம், 0.16 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மூலக்கதை