ஐபிஎல் டி20 தொடர் கேப்டன்சியில் தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து கவுதம் காம்பீர் கருத்து

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 தொடர் கேப்டன்சியில் தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து கவுதம் காம்பீர் கருத்து

டெல்லி: ஐபிஎல் டி20 தொடர் கேப்டன்சியில் தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்னையால் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) செப்.19ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீரர்கள் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் கிரிக்கெட் கணெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர்; ஐபிஎல் அணித் தலைமையை பொறுத்த வரை விராட் கோலி, தோனி இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஐபிஎல் முதல் 7 போட்டிகளுக்கு சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யமாட்டார். முதலாவதாக அணியின் முதல் 7 போட்டிகளுக்கு நிரந்தரமான 6 வீரர்கள் தொடர்ந்து இடம் பெறுவார்கள். ஆனால் விராட் கோலியோ முதல் 7 போட்டிகளுக்குள்ளாகவே அணியில் ஏகப்பட்ட வீரர்களை மாற்றுவார். எனவே ஆர்சிபி நிலையில்லாத அணியாக முதல் சுற்றிலேயே மாறிவிடும். அதனால்தான் ஆர்சிபி சரியான கலவைகளை கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அணியாகவே இப்போதுவரை இருக்கிறது. இப்போது கூட நான் சொல்வதெல்லாம் முதல் 7 போட்டிகளில் தொடக்கம் சரியில்லாமல் போனாலும். அணியில் மாற்றத்தை மேற்கொள்ளாமல் கோலி இருக்க வேண்டும் என கூறினார்.

மூலக்கதை