இலங்கை பிரிமியர் லீக் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 11, 2020

தினமலர்  தினமலர்
இலங்கை பிரிமியர் லீக் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 11, 2020

கொழும்பு: இலங்கை பிரிமியர் லீக் தொடரின் முதல் சீசன், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில், லங்கா பிரிமியர் லீக் (எல்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் ஆக. 28 முதல் செப். 20 வரை நடக்க இருந்தது. கொழும்பு, கண்டி, காலே, தம்புலா, யாழ்ப்பாணம் (ஜாப்னா) என்ற 5 அணிகள் பங்கேற்க இருந்தன. 

கொழும்பு, தம்புலா, பல்லேகெலே, அம்பாந்தோட்டை நகரங்களில் உள்ள 4 சர்வதேச மைதானங்களில் மொத்தம் 23 போட்டிகள் நடக்க இருந்தன. இங்கிலாந்தின் லியாம் பிளங்கட், நியூசிலாந்தின் டிம் சவுத்தீ உள்ளிட்ட 93 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள், கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வரும் 28ல் திட்டமிட்டபடி போட்டியை துவங்குவது சாத்தியமல்ல என்பதால் ஒத்திவைக்கப்பட்டது. யு.ஏ.இ.,யில் நடக்கவுள்ள 13வது ஐ.பி.எல்., தொடருக்கு பின் (செப். 19 – நவ. 10) இத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை