ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு

தினமலர்  தினமலர்
ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு

ஒரு காலத்தில் சக்கைபோடு போட்ட சீரியல் சித்தி. ராதிகாவுக்கு சின்னத்திரையில் தனி அடையாளத்தை கொடுத்த தொடர். அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 4 மாதமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது சின்னத்திரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியதால் கடந்த மாதம் 16ந் தேதி முதல் பல மாற்றங்களுடன் சித்தி 2 படப்பிடிப்பு தொடங்கியது. புதிய எபிசோட்கள் வருகிற ஆகஸ்ட் 10ந் தேதி ஒளிபரப்பாகிறது.

இனி சித்தி சீரியல்களில் வரும் கேரக்டர்கள் கொரோனா கால நடைமுறைகளின் படி நடிக்கிறார்கள். சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கை கழுவுதல் போன்ற நடைமுறைகால காட்சிகள் படத்தில் இருக்கும். சேலைக்குக்கு ஏற்ற மேட்சான மாஸ்குடன் சித்தி ராதிகா தோன்றுவார். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மூலக்கதை