‘பிட்னஸ்’ அவசரம் வேண்டாம்: ரோகித் சர்மா ‘அட்வைஸ்’ | ஆகஸ்ட் 06, 2020

தினமலர்  தினமலர்
‘பிட்னஸ்’ அவசரம் வேண்டாம்: ரோகித் சர்மா ‘அட்வைஸ்’ | ஆகஸ்ட் 06, 2020

மும்பை: ‘‘ஐ.பி.எல்., தொடருக்கு முன், உடற்தகுதி மற்றும் திறமையை வளர்த்துக் கொள்ள வீரர்களுக்கு போதிய கால அவகாசம் உள்ளது,’’ என, ரோகித் சர்மா தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்க உள்ளது. கடந்த 4 மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்த வீரர்கள் விரைவில் பயிற்சியை துவங்க உள்ளனர். இதுகுறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியது: 

உள்ளரங்கு பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட்டேன். மும்பை பருவமழை காரணமாக தற்போது மைதானத்திற்கு சென்று பயிற்சியை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) மைதானத்தின் உள்ளரங்கு பயிற்சிக் கூடத்தை பயன்படுத்த அனுமதி கேட்க உள்ளேன். 

ஐ.பி.எல்., தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. இத்தொடர் துவங்குவதற்கு முன், வீரர்கள் அனைவரும் உடற்தகுதி மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வர். இதில் அவசரம் காட்டத் தேவையில்லை. நான், ‘பேட்டிங்’ பயிற்சியில் ஈடுபட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. மீண்டும் வலைப்பயிற்சியை துவக்கும் போது சற்று சவாலாக இருக்கும். உடல் மற்றும் மனதளவில் வலிமையாக இருப்பதால் விரைவில் ‘பார்முக்கு’ திரும்பலாம்.

இவ்வாறு ரோகித் கூறினார்.

மூலக்கதை