நண்பர்கள் தினம் - நண்பர்களுடன் வீடியோ காலில் விஜய் அரட்டை

தினமலர்  தினமலர்
நண்பர்கள் தினம்  நண்பர்களுடன் வீடியோ காலில் விஜய் அரட்டை

உலகம் முழுவதும் நேற்று ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மாலையில் விஜய் ரசிகர்கள் டிவியில் ஒளிபரப்பான விஜய் நடித்த 'பிகில்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, விஜய் அவருடைய நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி இருக்கிறார்.

அது பற்றி விஜய்யின் நெருங்கிய நண்பரும், டிவி நடிகருமான சஞ்சீவ் அவருடைய டுவிட்டர் தளத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “கெட் டு கெதர், அதோடு கொஞ்சம் வேடிக்கை, நண்பர்கள் ஒரு குடும்பம், மாம்ஸ் விஜய்,” என அவர் குறிப்பிட்டு அடுத்தடுத்து சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.

கொரானோ ஊரடங்கு வந்ததிலிருந்து விஜய் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அதிகம் வெளியாகவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அதில் பலர் விஜய் என்ன சொன்னார், என்ன பேசினார் என்று சஞ்சீவிடம் ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்டனர். ஆனாலும், அந்தப் பதிவில் கூட அஜித் ரசிகர்கள் சிலர் தரக்குறைவாக கமெண்ட்டுகளைப் பதிவிட, பதிலுக்கு, விஜய் ரசிகர்களும் தரக்குறைவாக கமெண்ட் செய்ய ஒருவருக்கொருவர் கமெண்ட்களால் அடித்துக் கொண்டதுதான் அதிர்ச்சியான ஒரு விஷயம்.

மூலக்கதை