சுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..!

தினமலர்  தினமலர்
சுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..!

இன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு நிறுவனம் முதல் ஷூ தயாரிப்பு நிறுவனம் வரை இந்தியாவில் பல நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து தற்போது பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான பாஸில் தாங்கள் தயாரிக்கும் கை கடிகாரங்களில் இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத பொருட்களை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. பாஸில் நிறுவனத்தின் இந்த முடிவு சமூகவலைதளங்களில் வரவேற்பினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் 2025ம் ஆண்டுக்குள் தங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளை 100% இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்பாக மாற்ற பாசில் நிறுவனம் முயற்சி செய்துவருகிறது. இதன் முதற்கட்டமாக தற்போது பாஸில் நிறுவனம் சோலார் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சோலார் பேனல் உள்ளது. இதன்மூலம் வாட்ச் ரீசார்ஜ் ஆகிறது.


வாட்சின் உள்ளே உள்ள பேட்டரியில் சோலார் பேனல் மூலம் கிரகிக்கப்பட்ட அயனிகள் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாட்சின் கேஸ், ஸ்ட்ராப் உள்ளிட்டவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இவை மறுசுழற்சி செய்யக்கூடிய வகை பிளாஸ்டிக்கால் ஆனது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தயாரிப்புகளை உருவாக்க பாஸில் நிறுவனம் எக்கோமேட்ச் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. பாஸில் சோலார் வாட்ச் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இவற்றை வளர்க்க அறிவுறுத்தல்கள் செய்யப்படுகின்றன. இதன்மூலம் மரம் நடும் பழக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் நிறுவனம் பழகி உள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதியின் கார்பன்-டை- ஆக்சைடு அளவையும் பாஸில் தளத்தில் பதிவிடலாம். இதுவரை 1,754 சோலார் பேனல் வாட்ச்களைத் தயாரித்துள்ள பாஸில் நிறுவனம், ரூபாய் 9 ஆயிரத்து 995 விலையில் இதனை விற்று வருகிறது. இந்த வாட்ச் கேஸ்களின் விட்டம் 36 முதல் 42 மில்லிமீட்டர் அளவு உடையவை ஆகும். குறிப்பிட்ட சில ரீடைல் கடைகளில் மட்டுமே இந்த சோலார் வாட்சுகள் கிடைக்கும். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை வாங்க பாஸில் வாட்ச் பிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மூலக்கதை