சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி

தினமலர்  தினமலர்
சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி

புது­டில்லி:கொரோனா பாதிப்­புக்கு உள்­ளாகி இருக்­கும், 15 கோடி சிறு வணி­கங்­க­ளுக்கு, 5,663 கோடி ரூபாய் நிதி­யு­தவி வழங்க இருப்­ப­தாக உலக வங்கி தெரி­வித்­து உள்­ளது.


ஏற்­க­னவே, கடந்த, 2019 ஜூலை முதல், 2020 ஜூன் வரை­யி­லான கால­கட்­டத்­தில், உலக வங்கி,
இந்­தி­யா­வுக்கு, 38 ஆயி­ரத்து, 732 கோடி ரூபாயை வழங்கி உள்­ளது.இது, கடந்த, 10 ஆண்­டு­களில் வழங்­கப்­பட்ட கட­னில் அதிக அள­வா­கும்.இதில், கொரோனா பாதிப்பை எதிர்­கொள்­வ­தற்­காக, கடந்த மூன்று மாதங்­களில் வழங்­கப்­பட்ட, 20 ஆயி­ரத்து, 763 கோடி ரூபா­யும் அடக்­கம்.

உலக வங்­கி­யின், இந்­திய இயக்­கு­னர் ஜூனைத்அக­மது கூறி­யி­ருப்­ப­தா­வது:பணப்­பு­ழக்­கத்தை அதி­க­ரிப்­ப­தன் மூல­மும், வங்கி சாராத நிதி நிறு­வ­னங்­கள் மற்­றும் சிறு நிதி வங்­கி­களை
வலுப்­ப­டுத்­து­வ­தன் மூல­மும், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை பாது­காப்­ப­தற்­கான
அர­சாங்­கத்­தின் முயற்­சிக்கு கைகொ­டுப்­ப­தற்­காக, இந்த நிதி வழங்­கப்­ப­டு­கிறது.

கொரோ­னா­வால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின், நிதி ஆதா­ரத்தை அதி­க­ரிக்­கச் செய்­வ­தற்­காக, இந்த அவ­சர கால நிதி­யு­தவி திட்­டத்­திற்கு, உலக வங்­கி­யின், நிர்­வாக இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் தந்­துஉள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

இதற்கு முன்­பாக, உலக வங்கி, இந்­தி­யா­வின் சமூக மற்­றும் ஆரோக்­கிய துறை­க­ளுக்கு, தலா ஒரு பில்­லி­யன் டாலர், அதா­வது, இந்­திய மதிப்­பில், 7,550 கோடி ரூபாய் என, மொத்­தம்,
15 ஆயி­ரத்து, 100 கோடி ரூபாயை வழங்கி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை