கோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020

கராச்சி: ‘‘கோஹ்லி மீது மரியாதை உள்ளது, ஆனால் பயமில்லை,’’ என நசீம் ஷா தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 17. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். க

ராச்சி டெஸ்டில் 5 விக்கெட் சாய்த்த இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த வயதில் இதுபோல சாதித்த வீரர் ஆனார். அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிராக இன்னும் விளையாடியது இல்லை. இந்நிலையில் கோஹ்லி குறித்து நசீம் ஷா கூறியது:

பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதும் ‘ஸ்பெஷல்’ தான். இந்த போட்டியில் இருந்து தான் ‘ஹீரோ’, வில்லன்கள் தோன்றுவர் என அடிக்கடி சொல்வேன். அதேநேரம் இரு அணிகள் மோதல் என்பது மிக அபூர்வம் தான். இருப்பினும் இந்திய அணிக்கு எதிராக விளையாட எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது விளையாட தயாராக உள்ளேன். இந்த நாட்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்வேன் என நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் எங்கள் ரசிகர்களை கைவிட்டு விட மாட்டேன். கோஹ்லியை பொறுத்தவரையில் அவர் மீது மரியாதை உள்ளது. ஆனால் அவரைப் பார்த்து எனக்கு பயமில்லை.

சிறப்பான வீரர்களுக்கு எதிரான பந்து வீசுவது என்பது எப்போதும் சவாலானது. ஆனால் அங்கு நீங்கள் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். கோஹ்லி மற்றும் இந்திய அணிக்கு எதிராக விளையாட தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை