அணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

தினமலர்  தினமலர்
அணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

புதுடில்லி:இந்தியாவில், ஸ்மார்ட்வாட்ச், இயர்போன் உள்ளிட்ட, ‘வியரபிள்ஸ்’ எனும், அணி கருவிகள் சந்தை, கடந்த ஆண்டில், 144 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும்; விற்பனை எண்ணிக்கை, 3.64 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், ஆராய்ச்சி நிறுவனமான, ‘ஐ.டி.சி.,’ தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அணி கருவிகள் விற்பனையில், இந்தியா, மூன்றாவது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில், டாப் 20 நாடுகளில், இந்தியாவில் தான், மூன்று இலக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது.இந்த வளர்ச்சிக்கு, இயர்போன் உள்ளிட்ட வற்றின் விற்பனை அதிகரித்தது, மற்றும், ‘ரிஸ்ட் பேண்டு’களிலிருந்து ஸ்மார்ட்வாட்சுக்கு மாறுவது ஆகியவை, முக்கிய காரணங்களாக அமைந்தன.

கடந்த ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், மூன்று இலக்க வளர்ச்சி பேணப்பட்டது. மேலும், கடந்த ஆண்டில் தான், ஒயர்களுடன் கூடிய கருவிகளிலிருந்து, ஒயர் இல்லாத கருவிகளுக்கு மாறுவதும் அதிகமாக நடைபெற்றுள்ளது.விலை அதிகமாக இருப்பினும், ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் அது, பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஆண்டில் மட்டும், 26 லட்சம் வாட்சுகள் விற்பனைக்கு விடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை