ரோகித் சர்மா ‘நம்பர்–8’ * டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக... | பெப்ரவரி 28, 2021

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா ‘நம்பர்–8’ * டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக... | பெப்ரவரி 28, 2021

துபாய்: டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய வீரர் ரோகித் சர்மா ‘நம்பர்–8’ இடம் பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டெஸ்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ‘ரேங்கிங்’ (தரவரிசை) பட்டியல் வெளியானது. ஆமதாபாத்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 66, 25 ரன் என சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா, சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி, முதன் முறையாக 8 வது இடம் பிடித்தார். 

தற்போது 742 புள்ளிகள் பெற்றுள்ள ரோகித், இதற்கு முன் 2019ல் 722 புள்ளிகளுடன் 10 வது இடம் பெற்றதே அதிகமாக இருந்தது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி 5வது, புஜாரா 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பவுலிங்கில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், 4 இடங்கள் முன்னேறி, 3வது இடம் பிடித்தார். ஆமதாபாத்தில் 11 விக்கெட் சாய்த்து அசத்திய அக்சர் படேல், 30 இடங்கள் முன்னேறி, 38 வது இடம் பெற்றார். இங்கிலாந்தின் ஜாக் லீச் (28 வது) முதன் முறையாக ‘டாப்–30’ பவுலர்கள் பட்டியலில் நுழைந்தார். ஆமதாபாத்தில் 5 விக்கெட் சாய்த்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், ‘ஆல் ரவுண்டர்கள்’ பட்டியலில் 13வது இடம் பெற்றார்.

 

‘டாப்–5’ பேட்ஸ்மேன்கள்

டெஸ்ட் அரங்கில் ‘டாப்–5’ இடம் பெற்ற பேட்ஸ்மேன்கள்: 

வீரர்/அணி புள்ளி

வில்லியம்சன்/நியூசி., 919

ஸ்டீவ் ஸ்மித்/ஆஸி., 891

லபுசேன்/ஆஸி., 878

ஜோ ரூட்/இங்கி., 853

கோஹ்லி/இந்தியா 836

 

‘டாப்–5’ பவுலர்கள்

டெஸ்ட் அரங்கில் ‘டாப்–5’ இடம் பெற்ற பவுலர்கள்: 

பவுலர்/அணி புள்ளி

கம்மின்ஸ்/ஆஸி., 908\

வாக்னர்/நியூசி., 825

அஷ்வின்/இந்தியா 823

ேஹசல்வுட்/ஆஸி., 816

சவுத்தீ/நியூசி., 811

 

‘டாப்–5’ ஆல் ரவுண்டர்கள்

டெஸ்ட் அரங்கில் ‘டாப்–5’ இடம் பெற்ற ஆல் ரவுண்டர்கள்: 

வீரர்/அணி புள்ளி

ேஹால்டர்/விண்டீஸ் 407

ஜடேஜா/இந்தியா 394

ஸ்டோக்ஸ்/இங்கி., 384

சாகிப் அல் ஹசன்/வங்கதேசம் 352

அஷ்வின்/இந்தியா 346

 

மூலக்கதை