‘சீனாவுடனான வர்த்தக உறவை கண்டிப்பாக தொடர வேண்டும்’

தினமலர்  தினமலர்
‘சீனாவுடனான வர்த்தக உறவை கண்டிப்பாக தொடர வேண்டும்’

மும்பை:சீனாவுடனான வர்த்தகத்தை, கண்டிப்பாக தொடர வேண்டும் என, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் கூறியுள்ளார்.

‘நம்பகமான வினியோக தொடர்புகளை ஏற்படுத்துவது’, என்பது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, ராஜிவ் பஜாஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகு றித்து, அவர் மேலும் கூறியதாவது: நாம், தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும்.அவ்வளவு பெரிய நாடு, அவ்வளவு பெரிய சந்தையை தவிர்த்துவிட்டு, நாம் வணிகத்தை நடத்தினால், காலப்போக்கில் நாம் முழுமையடையாமல் போய்விடுவோம்.

நாம், நமது நிறுவனத்தை, உலகளாவிய நிறுவனம் என்று கருத விரும்புகிறோம். அப்படி என்றால், உலகம் முழுதிலும் வினியோகஸ்தர்கள், சப்ளையர்கள் ஆகியோரையும் நாம் கொண்டிருக்க வேண்டும். நமது அரசு, ஏதோ ஒரு காரணத்துக்காக, ஜூன், ஜூலையில், இறக்குமதியில் குறிப்பாக, சீனாவிலிருந்து இறக்குமதி ஆவதில் கடுமை காட்டியது.

இது, நமது முகத்தை வெறுப்பதற்காக, நமது மூக்கை அறுத்தது போலாகும். உள்நாட்டு சந்தையில் இல்லாத ஒரு பொருளை, எப்படி ஒரே இரவில், நம்மால் வேறு இடத்திலிருந்து பெற முடியும்? நமக்கு எங்கு விலை குறைவாக, பொருட்கள் கிடைக்கிறதோ; அதை, அங்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை