பிரீமியம் மின்விசிறி பிரிவை விரிவுபடுத்த ஓரியண்ட்டின் ஐ-ப்ளோட் இன்வெர்ட்டர் மின்விசிறிகள்

தினமலர்  தினமலர்
பிரீமியம் மின்விசிறி பிரிவை விரிவுபடுத்த ஓரியண்ட்டின் ஐப்ளோட் இன்வெர்ட்டர் மின்விசிறிகள்

சிகே பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான ஓரியண்ட் எலக்ட்ரிக் லிமிடெட் தனது பிரீமியம் மின்விசிறிகளின் பிரிவை, ஐஓடி- இயக்கப்பட்ட மற்றும் 50 சதவீதம் எரிசக்தி சேமிப்புத் திறன் கொண்ட இன்வெர்ட்டர் மின்விசிறிகளின் அறிமுகத்தின் வழியாக விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் தற்போது பிரீமியம் மின்விசிறிகள் சந்தையில் 48 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. மேலும் இப்போது உயர்தர தயாரிப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையின் பின்னணியில் இன்னும் அதிக பங்களிப்பைக் கைபற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஐ-ப்ளோட் மின்விசிறி இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஓரியண்ட் ஐ-சீரிஸ் பிரீமியம் இன்வெர்ட்டர் மின்விசிறிகளின் ஒரு பகுதியாகும். இது அற்புதமான 230 சிஎம்எம் காற்று விநியோகத்தை வழங்குகிறது. சாதாரண மின்விசிறிகளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது, மேலும் குறைந்த மற்றும் ஏற்ற இறக்கமான மின்னழுத்தங்களில் கூட அமைதியாகவும் ஆற்றல் மிக்க வகையிலும் செயல்படுகிறது.

இந்த மின்விசிறி ஐஓடி- இயக்கப்பட்டிருக்கிறது மற்றும் ஓரியண்ட் ஸ்மார்ட் மொபைல் செயலி வழியாக அல்லது அலெக்சா மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் வழியாக குரல் கட்டளைகளுடன் இவற்றை மிக எளிதாக இயக்க முடியும். இந்த மின்விசிறிகள் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது. நான்கு தனித்துவமான ஃபினிஷ்களில் கிடைக்கும் ஐ-ஃப்ளோட் விசிறியின் விலை ரூ.4700 முதல் துவங்குகின்றன.

இதுகுறித்து ஓரியண்ட் எலக்ட்ரிக் லிமிடெட் நிர்வாக துணைத் தலைவர் அதுல் ஜெயின் கூறுகையில், “பிரீமியம் மின்விசிறிகள் பிரிவில், இன்று 48 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு, சந்தையில் தலைமைத்துவ நிலையில் நாங்கள் உறுதியாக வீற்றிருக்கிறோம். நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், வளர்ந்து வரும் போக்குகளின் மூலமாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம். இன்றைய நுகர்வோர் ஸ்மார்ட்டான, ஸ்டைலான, ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகளை விரும்புகிறார்கள், மேலும் வாழ்க்கைக்கு வசதியை சேர்க்கவும் விரும்புகிறார்கள். எங்கள் பிரீமியம் ஏரோசரீஸ் மற்றும் ஐ-சீரிஸ் வரம்பை ஒரே நேரத்தில் புதுமையான, நேர்த்தியான மற்றும் ஸ்மார்ட் ஆனால் ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகளுடன் நாங்கள் தொடர்ந்து விரிவாக்குவோம்” என்று கூறினார்.

பாரம்பரிய இண்டக்‌ஷன்-மோட்டார் அடிப்படையிலான மின்விசிறிகள் 70-75வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர், ஓரியண்ட் ஐ-சீரிஸ் மின்விசிறிகள் 32வாட்ஸ் மட்டுமே பயன்படுத்துகின்றன, இதனால் மின் நுகர்வு பாதிக்கும் மேலாக குறைகிறது. இந்தியாவில் நிறுவப்பட்ட அனைத்து மின்விசிறிகளும் ஐ-சீரிஸ் மின்விசிறிகளுடன் மாற்றப்பட்டால், இது ஆண்டுதோறும் சுமார் 1.12 லட்சம் ஜிகாவாட் ஹவர்ஸ் ஆற்றலைச் சேமிக்க உதவும். ரூ. 72,864 கோடி மிச்சமாகும் மற்றும் கார்பன் தடம் குறிப்பிடத்தக்க அளவு குறையும். விற்கப்படும் புதிய மின்விசிறிகளும் இன்வெர்ட்டர் மோட்டருடன் வந்தால், இது இந்தியாவை ஆண்டுக்கு 7530 ஜிகாவாட் மின்னாற்றலைச் சேமிக்க உதவும்.

மூலக்கதை