91 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

தினமலர்  தினமலர்
91 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

புதுடில்லி:அடுத்த நிதியாண்டில், நான்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கிட்டத்தட்ட, 91 ஆயிரம் புதிய நபர்களுக்கு பணி வழங்கத் திட்டமிட்டுள்ளன.

டி.சி.எஸ்., இன்போசிஸ், எச்.சி.எல்.,டெக், விப்ரோ, ஆகிய நான்கு நிறுவனங்களும், அடுத்த நிதியாண்டில், 91 ஆயிரம் கல்லுாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கின்றன.டி.சி.எஸ்., நிறுவனம், இந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட, 40 ஆயிரம் பேர்களை பணியில் அமர்த்தி இருப்பதாகவும்; அடுத்த நிதியாண்டிலும் இதே எண்ணிக்கையில் பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இன்போசிஸ் நிறுவனம், அடுத்த நிதியாண்டில், 24 ஆயிரம் கல்லுாரி பட்டதாரிகளை பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை விட, 15 ஆயிரம் பேர்களை, கூடுதலாக பணியில் அமர்த்த உள்ளது, இன்போசிஸ்.எச்.சி.எல்., நிறுவனமும், அடுத்த நிதியாண்டில், 15 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேபோல், விப்ரோவும், தேவைகள் அதிகரிப்பை பொறுத்து, கடந்த முறையை விட, அதிகளவில் ஆட்களை சேர்க்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மூலக்கதை