பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார் ஹெல்த்’

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார் ஹெல்த்’

புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம் விரைவில் பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.காப்பீட்டு துறையைச் சேர்ந்த, ‘ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம், 3 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்காக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக மருத்துவ காப்பீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல நிறுவனங்கள் விரிவாக்க முயற்சிகளில் இறங்கி வருகின்றன.இந்த வகையில், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனமும், புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான, பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 3 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு வருகிறார்.

மூலக்கதை