ஆஸி., கோட்டை தகர்க்கப்படும் * கவாஸ்கர் உறுதி | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
ஆஸி., கோட்டை தகர்க்கப்படும் * கவாஸ்கர் உறுதி | ஜனவரி 12, 2021

 மும்பை: ‘‘ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக பிரிஸ்பேன் இருக்கலாம். இதனை, ரகானே தலைமையிலான இந்திய அணி தகர்க்கும்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். 

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் ஜன. 15–19ல் நடக்கிறது. இம்மைதானம் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக திகழ்கிறது. 1931 முதல் இங்கு நடந்த 62 டெஸ்டில் 40ல் ஆஸ்திரேலியா வென்றது. 13 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து 4, விண்டீஸ் 3, நியூசிலாந்து 1ல் வென்றன. 1960ல் விண்டீஸ் மோதிய போட்டி ‘டை’ ஆனது. 

1989 க்குப் பின் இங்கு களமிறங்கிய 30 டெஸ்டில் ஆஸ்திரேலியா 24ல் வென்றது. 6 போட்டி ‘டிரா’ ஆனது. ஒன்றில் கூட தோற்கவில்லை. இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்டில் 5ல் தோற்றது. 2003ல் மட்டும் ‘டிரா’ செய்தது. இதுகுறித்து இந்திய அணி ‘ஜாம்பவான்’ வீரர் கவாஸ்கர் கூறியது:

ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக பிரிஸ்பேன் மைதானம் இருக்கலாம். சமீபகாலமாக இங்கு தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் ஆஸ்திரேலியா இம்முறை தோற்கலாம். இருப்பினும் இங்கு இந்திய அணி வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் கேப்டன் கோஹ்லி இல்லை, முன்னணி வீரர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் காயத்தால் அவதிப்படுகின்றனர். மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் உள்ளது. லபுசேன், ஸ்மித் ரன்கள் சேர்க்கின்றனர். சிறப்பான பவுலிங் படையை கொண்டுள்ளது. ஒருவேளை இப்போட்டியில் வென்றால் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் தொடராக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை