தென் ஆப்ரிக்கா–இங்கிலாந்து மோதல் ஒத்திவைப்பு | டிசம்பர் 04, 2020

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்கா–இங்கிலாந்து மோதல் ஒத்திவைப்பு | டிசம்பர் 04, 2020

கேப்டவுன்: தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோத இருந்த ஒருநாள் தொடர் ‘கொரோனா’ காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, கேப்டவுனில் முதல் போட்டி நடக்க இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் ஓட்டலில் தங்கி உள்ள தென் ஆப்ரிக்க வீரர் ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3வது தென் ஆப்ரிக்க வீரரானார்.

இதனையடுத்து ஒருநாள் தொடரை ஒத்திவைக்க தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் முடிவு செய்தன. இதன்படி, வரும் டிச. 6ல் பார்ல் நகரில் முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் கேப்டவுனில், டிச. 7, 9ல் நடக்கவுள்ளன.

இதுகுறித்து இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகள் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘இரு அணி வீரர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் அனைவரது பாதுகாப்பு காரணமாக ஒருநாள் தொடரை ஒத்திவைக்கிறோம்,’’ என, தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை