டி20யின் செம சொத்து

தினகரன்  தினகரன்
டி20யின் செம சொத்து

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியும் ஆர்.அஷ்வினுக்கு மீண்டும் டி20, ஒருநாள் அணிகளில் இடம் கிடைக்கவில்லை. டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாட உள்ளார். அதனால் ஆச்சர்யமடைந்த முன்னாள் வீரரும், டெல்லி  அணியின் பயிற்சியாளருமான முகமது கைப் சமூக ஊடகமொன்றில், ‘முடிந்த ஐபிஎல் தொடரில் கோஹ்லி, ரோகித், பொல்லார்ட், கெயில், வார்னர், டி காக், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரன் போன்றவர்களின் விக்கெட்களை பவர் பிளேயில்  அஷ்வின்  வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 வடிவத்தின் மதிப்புமிக்க சொத்து  அஷ்வின்’ என்று கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டக், ‘ரன் எடுக்காமல் கட்டுப்படுத்தும் வீரர்கள், விக்கெட்களை வீழ்த்தும் வீரர்கள் என 2வகை உண்டு. இந்த 2 வகைளிலும்  திறமை உள்ள  அஷ்வினை டி20, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டியது ஆச்சர்யமாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார். இதே கருத்தை வலியுறுத்திய கவுதம் கம்பீர், முத்தையா முரளிதரன் ஆகியோர், ‘சுழற்பந்து வீச்சாளர்களில் ஆப் ஸ்பின்னர், ரிஸ்ட் ஸ்பின்னர் என பாகுபாடு கிடையாது’என்று தெரிவித்திருந்தனர்.

மூலக்கதை