நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்..; அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம்

FILMI STREET  FILMI STREET
நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்..; அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது.

இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாணவியர் பிடித்தனர்.

அதன்படி திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளதுடன், தேசிய அளவில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

மேலும், சேலத்தை சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், தருமபுரியை சேர்ந்த அரவிந்த் 691 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்
1,615 மாணவர்கள் தேர்ச்சி.

4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார்.

ஆனால் அப்போது அவரால் அதிக மதிப்பெண்களை பெறமுடியவில்லை அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார் ஜீவித் குமார்.

Theni government school student scores 664 out of 720 in NEET exam

மூலக்கதை