தினேஷ் கார்த்திக் விலகல் | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
தினேஷ் கார்த்திக் விலகல் | அக்டோபர் 16, 2020

அபுதாபி: கோல்கட்டா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகினார்.

ஐ.பி.எல்., தொடரில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா அணியின் கேப்டனாக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இருந்தார். இந்த சீசனில் இவரது தலைமையிலான கோல்கட்டா அணி 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வியை பெற்றது. இவர், 7 போட்டியில், ஒரு அரைசதம் உட்பட 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என, இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கார்த்திக் தெரிவித்தார். இதுகுறித்து இவர் கூறுகையில், ‘‘பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்,’’ என்றார்.

புதிய கேப்டனாக இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் அறிவிக்கப்பட்டார்.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் சி.இ.ஓ., வெங்கி மைசூர் கூறுகையில், ‘‘தினேஷ் கார்த்திக்கின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இவரது முடிவுக்கு மதிப்பளிக்கிறோம். கடந்த இரண்டரை ஆண்டாக அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு நன்றி. இனிவரும் போட்டிகளுக்கு இயான் மார்கன் கேப்டனாக செயல்படுவார். இவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்,’’ என்றார்.

மூலக்கதை