‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில் கபில்தேவ் முதலீடு
மும்பை:முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், ‘ஹார்மோனிஸர் இந்தியா’ நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்.மின்சாரத் துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான, ஹார்மோனிஸர் இந்தியா நிறுவனத்தில், கபில்தேவ் எவ்வளவு ரூபாய் முதலீட்டை மேற்கொண்டுஇருக்கிறார் என்பது அறிவிக்கப்
படவில்லை.
உலககோப்பை நாயகனான கபில்தேவ், கடந்த 2015ம் ஆண்டிலிருந்தே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.குரோசர் பீப்பிள்ஈஸி டாட் காம், சம்கோ வெஞ்சர்ஸ், விஸ்கவுன்சல், வூ உள்ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மூதலீடுகளை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக இப்போது, ஹார்மோனிஸர் இந்தியா நிறுவனத்திலும் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்.கிட்டத்தட்ட, 14 காப்புரிமைகளை பெற்ற மிகச் சிறந்த இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களை ஆதரிக்கும் வகையில், ஹார்மோனிஸர் இந்தியா நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டிருப்பதாக, கபில்தேவ் தெரிவித்து உள்ளார்.