துவக்கம் முதலே தட்டுத்தடுமாறிய இந்தியா: திட்டமிட்டு விளையாடி வென்ற வங்கதேசம்...கோஹ்லியை முந்தி முதல் இடத்தை பெற்ற கேப்டன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
துவக்கம் முதலே தட்டுத்தடுமாறிய இந்தியா: திட்டமிட்டு விளையாடி வென்ற வங்கதேசம்...கோஹ்லியை முந்தி முதல் இடத்தை பெற்ற கேப்டன்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு உச்சகட்டத்தை அடைந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. தொண்டை வறட்சி மற்றும் கண் எரிச்சல்  ஆகியவற்றால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20  போட்டி நேற்றிரவு நடந்தது. வங்கதேச வீரர்கள் பயிற்சியின் போதே மிகவும் சிரமப்பட்டாலும், போட்டியில் எந்த புகாரும் கூறாமல் சிரமப்பட்டு ஆடினர்.   டாஸில் வென்ற வங்கசே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா தடுமாற்றத்துடன் தான் பேட்டிங் ஆடத் துவங்கியது.

ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து  வந்த ராகுல் 15 ரன்களில் வெளியேறினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் 22, ரிஷப் பண்ட் 27 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர்.

 வங்கதேச அணி எட்டு  பவுலர்களை பயன்படுத்தி இந்திய அணிக்கு எதிராக புதிய வியூகம் அமைத்தது. தவான் மட்டுமே பொறுப்பாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார்.


அறிமுக வீரர் சிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் க்ருனால் பண்டியா அதிரடி ஆட்டம்  ஆடினர்.

இந்தியா 20 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணியில் எட்டு பவுலர்கள் பந்து வீசினாலும், இளம் வீரர் ஆபிப்  ஹுசைன் 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

ஷபியுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் தலா 2  விக்கெட்கள் வீழ்த்தினர்.

149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் ஆடத் துவங்கியது. இந்தியா விக்கெட்களை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்  என்ற நிலையில், முதல் ஓவரில் லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தி தீபக் சாஹர் அசத்தல் துவக்கம் அளித்தார்.

இருந்தாலும், அடுத்து ஆடிய நயீம்  26, சவும்யா சர்க்கார் 39 பொறுப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தனர். முஷ்பிகுர் ரஹீம் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை  ஆட்டமிழக்காமல் நின்றார்.

கடைசி நேரத்தில் வந்த கேப்டன் மக்மதுல்லா 7 பந்துகளில் 15 ரன்கள் அடித்து, சிக்ஸ் அடித்து தன் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி தேடிக்  கொடுத்தார். வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இதுவரை எட்டு போட்டிகளில் இந்தியாவிடம் டி20 போட்டிகளில் தோல்வி  அடைந்து இருந்த வங்கதேசம், ஒன்பதாவது போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த இந்த போட்டி, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 99வது போட்டியாகும்.

இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில்  விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், 8வது ரன்னை எடுக்கும்போது டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த  வீரர்கள் சாதனையில் விராட் கோஹ்லியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது ரோகித் சர்மா 2452 ரன்கள் அடித்துள்ளார்.

.

மூலக்கதை