சரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ்

தினமலர்  தினமலர்
சரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ்

புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று முதன் முறையாக, 9 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை, வர்த்தகத்தின் இடையே எட்டியது.காலாண்டு முடிவுமும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 9.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், வர்த்தக முடிவில், 8.97 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து நிலைபெற்றது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வரவிருந்த நிலையில், அதன் பங்குகளின் விலை, நேற்று வர்த்தகத்தின் போது அதிகரித்தது.இந்நிறுவனப் பங்குகள் விலை, வர்த்தக முடிவில், 1.37 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,415.30 ரூபாய் என்ற அளவில் முடிவுற்றது. கடந்த ஆண்டுவர்த்தகத்தின் இடையே பங்குகளின் விலை, 2.28 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,428 ரூபாய் என்ற நிலையை தொட்டது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,
இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 8 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.காலாண்டு முடிவிலும் கலக்கல்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18.6 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 262 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலகட்டத்தில் 9,516 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த வருவாய், 1.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.டெலிகாம் நிறுவனமான, ஜியோவின் நிகர லாபம், 990 கோடி ரூபாய்.சில்லரை வணிகமான, இ.பி.ஐ.டி.டி.ஏ., நிகர லாபம், 13 சதவீதம் அதிகரித்து, 2,322 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
காலாண்டு முடிவிலும் கலக்கல்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18.6 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 262 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலகட்டத்தில் 9,516 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த வருவாய், 1.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.டெலிகாம் நிறுவனமான, ஜியோவின் நிகர லாபம், 990 கோடி ரூபாய்.சில்லரை வணிகமான, இ.பி.ஐ.டி.டி.ஏ., நிகர லாபம், 13 சதவீதம் அதிகரித்து, 2,322 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்( சந்தை மதிப்பில்)நிறுவனம் சந்தை மதிப்பு (ரூபாய் கோடிகளில்)ரிலையன்ஸ் 8,97,179.47டி.சி.எல். 7,71,996.87எச்.டி.எப்.சி., பேங்க் 6,72,466.30எச்.யூ.எல்., 4,55,952.72எச்.டி.எப்.சி., 3,61,801.97இன்போசிஸ் 3,29,751.88கோட்டக் மகிந்திரா வங்கி 3,08,708.32ஐ.டி.சி., 3,02,861.98ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2,82,783.39பஜாஜ் பைனான்ஸ் 2,39,947.60 டாப் 10 நிறுவனங்கள்

மூலக்கதை