தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம்

தினமலர்  தினமலர்
தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம்

சென்னை: தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நான்கு மாதங்களாக மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிவடைந்துள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 7ம் தேதி கமல் பிறந்தநாளில் தர்பார் படத்தின் தீம் மியூசிக் வெளியிடப்படும் என அனிருத் அறிவித்துள்ளார். 2020 பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாகிறது.

இந்நிலையில் தர்பார் ரஜினியின் பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸ் மகனின் பெயர் ஆதித்யா. அவரது தந்தை பெயர் அருணாச்சலம். இவை இரண்டையும் சேர்த்து, ரஜினிக்கு பெயர் சூட்டி இருக்கிறார் முருகதாஸ்.

மூலக்கதை