அமிதாப் பச்சனுக்கு என்னாச்சு? - மருத்துவமனையில் அனுமதி

தினமலர்  தினமலர்
அமிதாப் பச்சனுக்கு என்னாச்சு?  மருத்துவமனையில் அனுமதி

பாலிட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன். 77 வயதை கடந்த இவர், இப்போதும் சினிமாவில் பிஸியாக உள்ளார். கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெப்பாடிடீஸ் பி வைரஸ் இருந்துள்ளது. இதனால் அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். இந்த பிரச்னை தனக்கு இருப்பதை சமீபத்தில் தான் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை(அக்.,15) நள்ளிரவு 2 மணிக்கு, திடீர் உடல் நலக்குறைவால், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு(ஐசியூ) இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

மூலக்கதை