தெலுங்கில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள 'பிகில்' டிரைலர்

தினமலர்  தினமலர்
தெலுங்கில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள பிகில் டிரைலர்

விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி கடந்த 5 நாட்களாக யு-டியூப் டிரென்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியத் திரைப்படங்களிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற படம் என 2.1 மில்லியன் லைக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.

'பிகில்' படம் தெலுங்கில் 'விசில்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. தெலுங்கு டிரைலரை நேற்று வெளியிட்டனர். அந்த டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே நாளில் 14 லட்சம் பார்வைகளை டிரைலர் கடந்துள்ளது.

இந்தப் படம் முழு ஆக்ஷன் படமாக இருப்பதால் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் என படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் மகேஷ் கொனேரு சொல்லியிருக்கிறார். சுமார் 9 கோடிக்கு தெலுங்கு உரிமை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மூலக்கதை