வளர்ச்சி 6.1 சதவீதம் பன்னாட்டு நிதியம் குறைந்தது

தினமலர்  தினமலர்
வளர்ச்சி 6.1 சதவீதம் பன்னாட்டு நிதியம் குறைந்தது

வாஷிங்­டன்:இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்­பாண்­டில், 6.1 சத­வீ­த­மாக இருக்­கும் என, குறைத்து கணித்­துள்­ளது, ஐ.எம்.எப்., எனும், பன்­னாட்டு நிதி­யம்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில், பொரு­ளா­தார வளர்ச்சி, 7.3 சத­வீ­த­மாக இருக்­கும் என்று கணித்­து இருந்த நிலை­யில், தற்­போது வளர்ச்­சியை, 1.2 சத­வீ­தம் குறைத்து, 6.1 சத­வீ­த­மாக இருக்­கும் என்று மதிப்­பிட்­டுள்­ளது. கடந்த, 2018ல், நாட்­டின் உண்­மை­யான வளர்ச்சி விகி­தம், 6.8 சத­வீ­தம் என்ற நிலை­யில், 2019ல், 6.1 சத­வீ­த­மாக இருக்­கும் என தெரி­வித்­துள்­ளது.

வட்டி குறைப்பு, கார்ப்­ப­ரேட் வரி குறைப்பு, கிரா­மப்­புற நுகர்­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் அரசு
திட்­டங்­கள் போன்­ற­வற்­றால் வளர்ச்சி ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் உள்ளன என்­றும்,
நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, அடுத்த ஆண்­டில் ஏற்­றம் பெற்று, 7 சத­வீ­த­மாக இருக்­கும் என்­றும் பன்­னாட்டு நிதி­யம் தெரி­வித்­துள்­ளது.


சீனாவை பொருத்­த­வரை, 2018ல், அந்­நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 6.6
சத­வீ­த­மாக இருந்த நிலை­யில், நடப்பு ஆண்­டில், 6.1 சத­வீ­த­மாக இருக்­கும் என்­றும், அடுத்த ஆண்­டில், 5.8 சத­வீ­த­மாக மேலும் குறை­யும் என்­றும் பன்­னாட்டு நிதி­யம்தெரி­வித்­துள்­ளது.
இதற்கு முன், கடந்த ஞாயிறு அன்று, உலக வங்கி, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 6
சத­வீ­த­மாக இருக்­கும் என்று குறைத்து அறி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை